\
Ayush Shetty knocks out World No 1 Shi in smashing World Championships debut
Ayush Shetty ani

உலக சாம்பியன்ஷிப்| அறிமுகப் போட்டியிலேயே உலகின் நம்பர் 1 வீரரை நாக் அவுட் செய்த இந்திய வீரர்!

டெல்லியில் நடைபெற்று வரும் BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முதலிட வீரரான ஷி யுகியை வீழ்த்தி இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Published on

2026ஆம் ஆண்டுக்கான BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தொடங்கியிருக்கும் இந்தத் தொடர் இன்றுமுதல் ஆகஸ்ட் 23 வரை புது டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், இன்றைய நாளின் தொடக்கப் போட்டியில், கர்நாடகாவின் கார்கலாவைச் சேர்ந்த 21 வயதான இளம் பேட்மிண்டன் வீரர் ஆயுஷ் ஷெட்டி, உலகின் முதலிட வீரரான ஷி யுகியை (Shi Yuqi) வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Ayush Shetty
Ayush Shetty ani

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் பிரிவில், அவர் 21-14, 13-21, 21-19 என்ற கணக்கில் ஆயுஷ், யுகியை வீழ்த்தினார். தனது முதல் உலக சாம்பியன்ஷிப் தொடரிலேயே, நடப்பு சாம்பியனும் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சீன வீரர் ஷி யுகியை தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் ஷி யுகிக்கு எதிராக ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த ஆயுஷ், இம்முறை தனது அதிரடி ஸ்மாஷ் (Smash) மற்றும் சிறந்த தடுப்பாட்ட உத்தியால் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். முன்னதாக, ஆயுஷின் பயிற்சியாளர் விமல் குமார், "ஆகஸ்ட் 17 ஷி யுகிக்கு ஒரு மோசமான நாளாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com