இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூரில் வரும் வியாழக்கிழமை நடக்கிறது. காயம் காரணமாக கடந்த 3 ஒரு நாள் போட்டிகளில், சுழல்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 3 போட்டிகளிலும் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காயத்தில் இருந்து அக்ஸர் படேல் மீண்டுள்ளதால் ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். அடுத்த போட்டியில் ஆடும் லெவனில் அக்ஸர் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
அதே நேரம் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகி இருந்த தவான், அடுத்து நடக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.