
துரோணச்சாரியர் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கியிருப்பது, தவறான முடிவு என பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணா, தமது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிலர் கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் தம் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது, விருதுக்கான பட்டியலில் இருந்து தமது பெயர் நீக்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
பாராலிம்பிக் கமிட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்துள்ளார். அந்த வழக்கில் எனக்கு சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது, குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவர் தொடுத்த வழக்கால் தமக்கான விருது மறுக்கப்படுவது பொருத்தமாகாது என சத்தியநாரயணா கூறினார்.