மூன்று நாள் பயிற்சி ஆட்டம்: முன்னிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி!

மூன்று நாள் பயிற்சி ஆட்டம்: முன்னிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி!
மூன்று நாள் பயிற்சி ஆட்டம்: முன்னிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி!

இந்திய ஏ அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணி 39 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்திய ஏ - ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே ஆட்டமிழக்காமல் 117 ரன்களை எடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தன்னுடைய இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது. அந்த அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 114 ரன்களை எடுத்துள்ளார். இந்திய தரப்பில் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது.

இந்தியாவின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் முகமது சிராஜ் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய ஏ அணியின் முதல் இன்னிங்ஸைவிட ஆஸ்திரேலிய ஏ அணி 39 ரன்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com