முதல் ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்

முதல் ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்
முதல் ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்

சிட்னியில் நடக்கும் முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக, 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்த நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ் ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 71 ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னி யில் இன்று நடக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக, அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் வீரர்கள் செயல்படுவார்கள் என்பதால் ஒவ்வொரு வீரரும் முழு திறமையுடன் இதில் விளையாடுவார்கள்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்ற இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டியில் களம் இறங்குறது. ஒரு நாள் அணிக்கான வீரர்கள், தவான், கேதர் ஜாதவ், ராயுடு, தோனி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால், நமது அணி சவாலான ஸ்கோரை எட்டும். 

விக்கெட் கீப்பர் தோனி, தான் பங்கேற்ற கடந்த 20 போட்டிகளில் ஒரு  அரை சதம் கூட அடித்ததில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரது இடத்துக்குப் பலத்த போட்டிகள் இருப்பதால், இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். 

டெஸ்ட் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஸ்மித், வார்னர் நீக்கத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி எந்த சர்வதேச தொடரையும் வென்றதில்லை. கடைசியாக ஆடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த தொடரை வெல்ல அந்த அணி, கடுமையாகப் போராடும்.

சிட்னியில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 16 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. 13-ல் ஆஸ்திரேலியாவும், 2-ல் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன. மழையால் ஒரு போட்டியில் முடிவில்லை. ஆஸ்திரேலியாவில் இரு அணிகளும் 48 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் 35 போட்டியில் ஆஸ்தி ரேலியாவும், 11 போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. 2 போட்டியில் முடிவில்லை.

அணி விவரம்:

இந்தியா: 

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ் வர்குமார், கலீல் அகமது, முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: 

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், நாதன் லயன், பீட்டர் சிடில், பெரென்டோர்ஃப்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com