“ஆஸ்திரேலியர்கள் முட்டாள்கள் அல்ல” ; கம்மின்ஸ் - லாங்கர் சர்ச்சையில் கிளார்க் காட்டம்

“ஆஸ்திரேலியர்கள் முட்டாள்கள் அல்ல” ; கம்மின்ஸ் - லாங்கர் சர்ச்சையில் கிளார்க் காட்டம்
“ஆஸ்திரேலியர்கள் முட்டாள்கள் அல்ல” ; கம்மின்ஸ் - லாங்கர் சர்ச்சையில் கிளார்க் காட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஜஸ்டின் லாங்கர். அவரது பதவிக் காலத்தை ஆறு மாத காலம் வரை நீட்டிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவர் விலகியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக அவர் பதவி விலகியதாக சொல்லப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் லாங்கரை கையாண்ட விதம் குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்கள் பலரும் கருத்து சொல்லி இருந்தனர். 

அதில் பெரும்பாலான கருத்துகள் லாங்கருக்கு ஆதரவாக இருந்தது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. லாங்கர் பதவி விலக கம்மின்ஸ் காரணம் என்றெல்லாம் கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்த நிலையில் கிளார்க் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “ஆஸ்திரேலியர்கள் முட்டாள்கள் அல்ல. ரசிகர்கள், மக்கள், முன்னாள் வீரர்கள் என அனைவருக்கும் இந்த விவகாரத்தில் தனது நிலைபாடு என்ன என்பது குறித்து கம்மின்ஸ் பொது வெளியில் சொல்லியாக வேண்டும். எல்லோரும் லாங்கர் விலகலுக்கு கம்மின்ஸ்தான் காரணம் என சொல்லி வருகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் லாங்கருக்கு மத்தியில் கம்மின்ஸ் சிக்கியுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com