“அவர் பணியை சிறப்பாக செய்பவர்” - இடைக்கால பயிற்சியாளரை புகழ்ந்த ஆரோன் ஃபின்ச்

“அவர் பணியை சிறப்பாக செய்பவர்” - இடைக்கால பயிற்சியாளரை புகழ்ந்த ஆரோன் ஃபின்ச்
“அவர் பணியை சிறப்பாக செய்பவர்” - இடைக்கால பயிற்சியாளரை புகழ்ந்த ஆரோன் ஃபின்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜஸ்டின் லாங்கர் திடீரென விலகினார். அணியில் சீனியர் வீரர்கள் சிலருடனான மோதல் போக்கினால் அவர் பதவியை துறந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்ட்ரூ மெக்டொனால்டை புகழ்ந்துள்ளார் அந்த அணியின் ஷார்டர் பார்மேட் கிரிக்கெட் கேப்டன் ஆரோன் ஃபின்ச். 

“அமைதியான அணுகுமுறையை பின்பற்றுபவர் அவர். ஆட்டத்தின் முடிவை கண்டு பதட்டம் கொள்ளவும் மாட்டார். தெளிவாக விஷயங்கள் திட்டமிடக் கூடியவர். 

அவருடன் இணைந்து விளையாடிய அனுபவங்கள் எனக்கு உண்டு. நீண்ட நாட்களாக அவரை அறிந்தவன் நான். அதனால் இதை சொல்கிறேன் அவரது பணியை சிறப்பாக செய்பவர் அவர் என்று” என சொல்லியுள்ளார் ஃபின்ச். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com