ஆஷஸ் வெற்றி: உஸ்மான் கவாஜாவுக்காக ஷாம்பெயின் கொண்டாட்டத்தை நிறுத்திய ஆஸி. வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 4 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் கம்பேக் கொடுத்த உஸ்மான் கவாஜா, சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாடிய முதல் இஸ்லாமியர். அணி வெற்றி பெற்ற போதும் சக வீரர்கள் மது வகையான ஷாம்பெயின் தெளித்து கொண்டாட தயாராக இருக்க அதிலிருந்து விலகியிருந்தார். தனது மதத்தின் மீதான நம்பிக்கையினால் கவாஜா அப்படி செய்துள்ளார்.
அதை கவனித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கமமின்ஸ், தன் அணி வீரர்களை ஷாம்பெயின் பாட்டிலை கீழே வைக்குமாறு சொல்லியதோடு கவாஜாவை கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைத்தார். உடனே கவாஜாவும் மேடையில் ஏறி கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
அதற்கு பின்னர் அது குறித்து ட்வீட் செய்துள்ளார் கவாஜா. அதில் சகவீரர்களுக்கு நன்றி சொல்லியுள்ளார். “எனது வருகைக்காக வழக்கமான ஷாம்பெயின் கொண்டாட்டத்தை தவிர்த்தார்கள். நாங்கள் சரியான திசையில் பயணிப்பதாக உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.