
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் நிக் கிர்கியோஸ் மற்றும் தனாசி கொக்கினாகிஸ் இணையர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இருவரும் சக ஆஸ்திரேலிய வீரர்களான மேத்யூ எப்டன் மற்றும் மேக்ஸ் பர்செலை வீழ்த்தி இந்த பட்டத்தை வென்றனர்.
7-6, 6-4 என்ற செட் கணக்கில் அவரல் சாம்பியன் பட்டத்தை வென்றனர். பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் இருவரும் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
நான் உங்களை நேசிக்கிறேன் என நிக்கிடம் தனாசி கொக்கினாகிஸ் வெற்றிக்கு பிறகு சொல்லியிருந்தார். உங்களைத் தவிர இந்திய வெற்றியை நான் யாருடனும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை என நிக் கிர்கியோஸும் சொல்லியிருந்தனர்.