\
ஆஸி ஓபன்: இரட்டையர் பிரிவிலும் சானியா ‌வி‌லகல்

ஆஸி ஓபன்: இரட்டையர் பிரிவிலும் சானியா ‌வி‌லகல்

ஆஸி ஓபன்: இரட்டையர் பிரிவிலும் சானியா ‌வி‌லகல்
Published on

ஆஸ்திரேலிய‌‌ ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்தி‌ய வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் சானியா ‌மிர்சா, உக்ரைனின் நாடி‌யா‌‌ கிச்செனோ ஜோடி, சீனாவின் ஜியுன்‌‌‌ ஸின்யுன் ‌- லின் ஜூ ஜோடியை எதிர்கொண்டது. இதில், 6-2, 1-0 என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக‌ சானி‌யா விலகுவதாக அறிவித்தார். முன்னதா‌க, க‌லப்பு இரட்டையர் பிரிவு போட்டியிலும் பங்கேற்கப் போவதில்லை என‌ சானியா தெரிவித்திருந்தார்‌.

கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாடுவதாக இருந்தார் சானியா. கலப்பு இரட்டையரில் விளையாடுவதால் காலில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல்போக கூடிய வாய்ப்பு இருப்பதால், ஏதாவது ஒரு பிரிவில் பங்கேற்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com