“பண்ட் கிளாஸான வீரர்; அடுத்த முறை அவருக்கு எதிராக கவனமாக இருப்போம்” - பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நிலை பவுலருமான பேட் கம்மின்ஸ் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டை புகழ்ந்துள்ளார். “பண்ட் ஒரு கிளாஸான கிரிக்கெட் வீரர். அவருக்கு எப்போது அட்டாக்கிக் பிளே ஆட வேண்டுமென்பதும் தெரியும்” என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
“இதை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் என சொல்லலாம். அந்த போட்டியில் புஜாரா களத்தில் இருந்த போது ஆட்டம் அந்தளவிற்கு வேகமாக நகரவில்லை. பண்ட் களத்திக்ரு வந்ததும் ஆட்டம் வேகமெடுத்தது. அது ஒரு அற்புதமான தருணம். அனைத்தும் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என எண்ணிய நிலையில் அப்படியே மாறியது. பண்ட் ஒரு கிளாஸான கிரிக்கெட் வீரர். அவருக்கு எப்போது அட்டாக்கிக் பிளே ஆட வேண்டுமென்பதும் தெரியும். அவர் எந்த திசையில் ஆடினால் தன்னால் ரன் குவிக்க முடியும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அடுத்த முறை அவருடன் விளையாடும் போது அதில் நாங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்” என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய பண்ட் 274 ரன்களை குவித்திருந்தார். அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.