டேவிட் வார்னரின் ‘ரவுடி பேபி’ வெர்ஷன் - வைரல் வீடியோ
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் களத்தில் ரன்குவிப்பதில் எவ்வளவு மும்முரம் காட்டுவாரோ அதே அளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக செயல்படுபவர். ஹிட் பாடல்களுக்கு குடும்பத்துடன் இணைந்து நடனமாடி அதை தனது சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்வது வழக்கம். அதற்கென பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் அவரை பின் தொடர்ந்து வருகிறது. அவ்வபோது இந்த வீடியோக்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்துவார் வார்னர்.
இந்நிலையில் ஃபேஸ் அப் அப்ளிகேஷனை பயன்படுத்தி நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடனம் ஆடிய ரவுடி பேபி பாடலில் தனுஷின் முகத்தை ஃபேஸ் அப் மூலம் எடிட் செய்து அதில் வார்னரின் ஒரு பாதி முகத்தை வைத்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 32 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது. ரவுடி பேபி ஒரிஜினல் வெர்ஷன் 1.1 பில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது.
‘தயை கூர்ந்து ஒரு பெயரிடுங்கள்’ என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ள வார்னர், நடிகர் தனுஷையும் இதில் டேக் செய்துள்ளார். ரசிகர்கள் சிலர் வார்னரின் இந்த ரவுடி பேபி வெர்ஷனை ‘டேவிட் பேபி’ என சொல்லி வருகின்றனர்.