24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட ஆயத்தமாகும் ஆஸ்திரேலியா!

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட ஆயத்தமாகும் ஆஸ்திரேலியா!
24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட ஆயத்தமாகும் ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கக்கே அணி. 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டி இந்த சுற்றுப்பயணத்தில் அடங்கும். அதற்காக ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய காரணத்தால் சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வந்தன. 

கடந்த ஆண்டு பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் சொல்லி அங்கிருந்து கிரிக்கெட் விளையாடாமல் திரும்பியிருந்தது. இங்கிலாந்து அணி கூட சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் பாகிஸ்தான் தொடரை தவிர்த்திருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் விளையாடுவது வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் தொடராக பார்க்கப்படுகிறது. 

வரும் 4-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ளது. முன்னதாக இரு அணி கேப்டன்களும் டெஸ்ட் தொடருக்கான கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் சிறப்பு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அது சார்ந்த வீடியோவை அவர் பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com