அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள புது வியூகம் -'டூப்ளிகேட்' அஸ்வினை களமிறக்கிய ஆஸ்திரேலியா

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள புது வியூகம் -'டூப்ளிகேட்' அஸ்வினை களமிறக்கிய ஆஸ்திரேலியா
அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள புது வியூகம் -'டூப்ளிகேட்' அஸ்வினை களமிறக்கிய ஆஸ்திரேலியா

அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிப்பதற்காக அவரைப் போன்று பந்துவீசக் கூடிய ஒருவரை தேடிப்பிடித்து வலைபயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி  4 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூரு புறநகரான ஆலூரில் உள்ள கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி செய்யும் மைதானத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

மேலும், இந்திய மண்ணில் நடக்கும் இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் மேலோங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். குறிப்பாக அஸ்வினின் சுழற்பந்து வீச்சு கடும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பதால் அதை சமாளிப்பதற்காக அஸ்வினை போன்று பந்துவீசக் கூடிய மகீஷ் பித்தியா என்பவரை வலைபயிற்சியில் பயன்படுத்தி வருகிறது ஆஸ்திரேலிய அணி. அஸ்வின் போன்றே பந்துவீசும் அவர், வலை பயிற்சியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தயார்படுத்த உதவி வருகிறார்.





Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com