\
முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற ஆஸ்திரேலியா

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற ஆஸ்திரேலியா

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற ஆஸ்திரேலியா
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கென்சிங்டன் ஓவல் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக பொல்லார்ட் 56 ரன்கள் எடுத்தார்.

மிச்சேல் ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் 26.2 ஓவர்களிலேயே 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com