விளையாட்டு
வெற்றிப் பயணத்தைத் தொடருமா இந்தியா?: முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
வெற்றிப் பயணத்தைத் தொடருமா இந்தியா?: முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
இந்தியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
புனேவில் உள்ள மகராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இந்திய அணி, கடைசியாக பங்கேற்ற 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பயணித்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் நோக்கில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. அதேபோல, இந்திய மண்ணில் கடந்த 2004ம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்கும் நோக்கில் ஆஸ்திரேலிய வீரர்கள் களம் காண்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.