ஷூட் அவுட் வரை சென்ற சாம்பியன்ஸ் ஹாக்கி - கோப்பையை தவறவிட்டது இந்தியா

ஷூட் அவுட் வரை சென்ற சாம்பியன்ஸ் ஹாக்கி - கோப்பையை தவறவிட்டது இந்தியா
ஷூட் அவுட் வரை சென்ற சாம்பியன்ஸ் ஹாக்கி - கோப்பையை தவறவிட்டது இந்தியா

சாம்பியனஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. 

37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா (BREDA ) நகரில் நடந்து வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி மட்டும் ஒரு கோல் அடித்தது. ஆஸ்திரேலிய வீரர் பிளேக்கி கோவெர்ஸ் 24வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. 

முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால், இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே வேகத்துடன் விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல இந்திய ரசிகர்களுக்கு டென்ஷன் எகிறியது. இந்திய வீரர்கள் நிறைய வாய்ப்பையும் வீணடித்தார்கள். ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் இந்திய வீரர் விவேக் சாஹர் கோல் அடித்து போட்டியை சமனுக்கு கொண்டு வந்தார். அப்பொழுதுதான் இந்திய ரசிகர்களுக்கு மூச்சே வந்திருக்கும். 

போட்டி சமனில் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு மேலும் தொற்றிக் கொண்டது. இரு அணிகளுமே கோல் அடிக்க முனைப்பு காட்டின. ஆனால் இறுதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி சமனில் முடிந்ததால் ஷூட் அவுட் முறைக்கு சென்றது. பெனால்டி ஷூட்டில் இரு அணிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட் முறையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து களக்கினர். ஆனால் இந்திய வீரர்கள் முதல் இரண்டு வாய்ப்புகளிலும் சொதப்பினர். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com