மேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது ஆஸி!

மேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது ஆஸி!

மேக்ஸ்வெல் மிரட்டல்: பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது ஆஸி!
Published on

பாகிஸ்தான் அணியுடனான ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்று, அந்த அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி, தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி, துபாயில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 98 ரன் எடுத்து 2 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கேப்டன் ஆரோன் பின்ச் 53 ரன்னும், ஷான் மார்ஷ் 61 ரன்னும், கிளன் மேக்ஸ்வெல் 33 பந்தில் 70 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் சின்வாரி 4 விக்கெட்டும் ஜுனைத் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் சோஹைல் அபார சதம் அடித்தார். அவர் 130 ரன் எடுத்தார். ஷான் மசூத் 50 ரன்னும் பொறுப்பு கேப்டன் இமாத் வாசிம் 50 ரன்னும் உமர் அக்மல் 43 ரன்னும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

33 பந்தில் 70 ரன் விளாசிய மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பாகிஸ்தான் அணியை, ’ஒயிட் வாஷ்’ செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com