ஜாம்பவான்கள் என நிரூபித்த ஆஸ்திரேலியா - 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஜாம்பவான்கள் என நிரூபித்த ஆஸ்திரேலியா - 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஜாம்பவான்கள் என நிரூபித்த ஆஸ்திரேலியா - 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 10வது போட்டி ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் முடிவில் 288 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் கவுல்டெர் நைல் 92 (60), ஸ்மித் 73 (103), அலெக்ஸ் கரே 45 (55) ரன்கள் குவித்தனர். இதில் கவுல்டெர் நைல்-ன் அதிரடியை யாரும் எதிர்பார்க்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் தாமஸ், காட்ரெல் மற்றும் ரஸல் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். கார்லஸ் பிராத்வொயிட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கீப்பர் ஹோப் 68 (105), கேப்டன் ஹோல்டர் 51 (57) மற்றும் நிலோலஸ் பூரான் 40 (36) ரன்கள் சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அபாரமாக பந்துவீசிய மிட்ஜெட் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com