ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டி : இலங்கை பேட்டிங்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. 

உலகக் கோப்பை போட்டிக்கான பயிற்சிப் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகின்றன. 6 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 7வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ‘தி ரோஸ் பவுல்’ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த 2வது பயிற்சிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடி தனது தனித்துவத்தை நிரூபிக்கும் முயற்சியில் பேட்டிங் செய்து வருகிறது. 

அதேசமயம் ஆஸ்திரேலிய அணி கடந்த சனிக்கிழமை நடந்த 3வது பயிற்சிப் போட்டியில் வலுவாக இருக்கும் இங்கிலாந்து அணியையே வீழ்த்தி அசுர பலத்துடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 24.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com