ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும் பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகின் ஷா அப்ரிதி பந்துவீச்சில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னருடன் லபுஸ்சக்னே இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். 22 வது ஓவரை முகமது அப்பாஸ் வீசினார். அப்போது, திடீரென்று மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
வார்னர் 45 ரன்களுடனும் லபுஸ்சக்னே 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.