ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் அசத்தல்: சரிவிலிருந்து மீண்ட இந்தியா!
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி,. மூன்றாவது நாளான இன்று 105-வது ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் சேர்த்துள்ளது.
வலிமையான ஆஸ்திரேலிய பவுலிங்கிடம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். ஷர்துல் தாகூர் 67 ரன்கள் அதிரடியாக சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 60 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.