ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!
Published on

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அறிமுக பவுலர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. சுப்மன் கில் (7 ரன்) கம்மின்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற சுமித்திடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் ஷர்மா அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டு அசத்தினார். நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் ஷர்மா (44 ரன், 74 பந்து, 6 பவுண்டரி) நாதன் லயனின் சுழற்பந்து வீச்சில் ‘கேட்ச்’ ஆகி வெளியேறினார். 100-வது டெஸ்டில் ஆடும் லயன் சாய்த்த 397-வது விக்கெட் இதுவாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் லயனின் சுழல் வலையில் ரோகித் ஷர்மா சிக்குவது இது 6-வது முறையாகும்.  

அதைத் தொடர்ந்து புஜாராவும், கேப்டன் அஜிங்யா ரஹானேவும் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 26 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது புஜாரா 8 ரன்னுடனும், ரஹானே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் கடைசி பகுதி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. மழையால் கிட்டத்தட்ட 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய 3 நாள் ஆட்டங்களும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்திய அணி 67-ஒவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் ஷர்துல் தாகூர்  மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com