டாஸ் வென்றது ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் முதல் பவுலிங்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 26வது லீக் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசுகிறது.
புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியையும் வென்று முதல் இடங்களுக்குள் முன்னேறும் முனைப்பில் உள்ளது. கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், பெரிய அணிகளுக்கே சவாலாக திகழும் பங்களாதேஷ் அணி இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைக்கும் முயற்சியில் இருக்கிறது. குறிப்பாக அனைத்து அணிகளிடமும் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தும் பங்களாதேஷ் அணியின் ஷகிப் உல் ஹாசன் இன்றும் அசத்துவாரா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.