ஆஸ்திரேலியா Vs இந்தியா : முதல் நாளில் இந்தியா ஆறு விக்கெட் இழந்து தடுமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா தடுமாறியது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. பகல் இரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி நேற்றே ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி இன்னிங்ஸை மயங்க் அகர்வாலும், பிருத்வி ஷாவும் ஓப்பன் செய்தனர். ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பிருத்வி ஷா க்ளீன் போல்டானார். அடுத்த நூறு பந்துகளில் மயங்க் அகர்வாலும், 17 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வேகத்தில் போல்டானார்.
இந்தியா 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்த நிலையில் கேப்டன் கோலி களம் இறங்கினார். புஜாராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ரன்களை உயர்த்த முயற்சித்தார். அதன் பலனாக இருவரும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா 43 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ரஹானேவுடன் கோலி 88 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்தார். இருப்பினும் 74 ரன்களுக்கு கோலி ரன் அவுட்டானது இந்தியாவுக்கு பாதகமானது. ரஹானேவும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஹனுமா விஹாரியும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவருக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
தற்போது காலத்தில் சாஹாவும், அஷ்வினும் உள்ளனர்.