ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: அறிமுகமானார் பாகிஸ்தானின் 16 வயது வேகம் !

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: அறிமுகமானார் பாகிஸ்தானின் 16 வயது வேகம் !

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: அறிமுகமானார் பாகிஸ்தானின் 16 வயது வேகம் !
Published on

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் 16 வயது வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. 

(ஷான் மசூத்)

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில், 16 வயதே நிரம்பிய நஸீம் ஷா சேர்க்கப்படுவார் என்று பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் அசார் அலி தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று களமிறங்கியுள்ளார். டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மிக இளம் வயது வீரர்களில் அவரும் ஒருவர். இவர், மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசக்கூடியவர்.

அவருக்கு, டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் தொப்பியை, அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் வாக்கர் யூனுஸ் வழங்கினார்.

ஷா, ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தபோது, உடல் நலக்குறைவால் அவரது தாயார் இறந்தார். உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார் ஷா. அங்கிருந்து அவரது சொந்த ஊர் செல்ல 48 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

(நஸீம் ஷா)

ஆனால் 24 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை செய்து முடிக்க வேண்டிய சூழல். அவரது சகோதரர்கள், இறுதிச் சடங்குக்கு வரவேண்டாம் என்றும் தாயாரின் ஆசைப்படி அங்கு விளையாடும்படி நஸீம் ஷாவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அசார் அலி 28 ரன்களுடனும் ஷான் மசூத் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

(அசார் அலி)

அணி விவரம்:
பாகிஸ்தான்:
அசார் அலி (கேப்டன்), ஷான் மசூத், ஹரிஸ் சோஹைல், ஆசாத் ஷபீக், இப்திகார் அஹமது, பாபர் ஆசம், ரிஸ்வான், யாசிர் ஷா, ஷகீன் ஷா அப்ரிதி, நஸீம் ஷா, இம்ரான் கான்.

ஆஸ்திரேலியா:
டிம் பெய்ன் (கேப்டன்),ஜோ பர்ன்ஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஹசல்வுட்
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com