"ஆப்கன் 20 -20 உலகக்கோப்பையில் பங்கேற்பது சாத்தியமில்லை" - ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்

"ஆப்கன் 20 -20 உலகக்கோப்பையில் பங்கேற்பது சாத்தியமில்லை" - ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்

"ஆப்கன் 20 -20 உலகக்கோப்பையில் பங்கேற்பது சாத்தியமில்லை" - ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதை அடுத்து அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாட மற்றநாடுகள் மறுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தலிபான்களின் முடிவால், வரும் நவம்பர் கடைசியில் தொடங்கவிருந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருப்பதை வரவேற்பதாக டிம் பெய்ன் கூறியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளிலும் மகளிர் அணியும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்பதை டிம் பெய்ன் சுட்டிக்காட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com