பாக்சிங் டே டெஸ்ட் : இந்தியா VS ஆஸ்திரேலியா - தடுமாறும் ஆஸியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்!

பாக்சிங் டே டெஸ்ட் : இந்தியா VS ஆஸ்திரேலியா - தடுமாறும் ஆஸியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்!

பாக்சிங் டே டெஸ்ட் : இந்தியா VS ஆஸ்திரேலியா - தடுமாறும் ஆஸியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்!
Published on

இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்காததால் தற்போது தள்ளாடி வருகிறது

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து பாக்சிங் டே டெஸ்டில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களை எடுத்தது. இந்தியா 326 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. அதன் மூலம் 131 ரன்கள் முன்னிலையும் பெற்றது. கேப்டன் ரஹானேவின் சதம் அதற்கு மிகமுக்கிய காரணம். 

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்காததால் தற்போது தள்ளாடி வருகிறது. பேர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித் என 33 ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்துள்ளனர். அஷ்வின், உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா என மூவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். 

முதல் இன்னிங்க்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் கேப்டன் ரஹானே களத்தில் வியூகங்களை சிறப்பாக அப்ளை செய்து வருகிறார். மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி  பெறவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com