273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி?

273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி?
273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. தற்போது இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா மற்றும்  ஷமி சேர்க்கபட்டனர். 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கவாஜா நல்ல தொடக்கத்தை தந்தனர். இந்திய அணியில் முக்கியமான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களாலும் முதல் விக்கெட்டை சாய்க்கமுடியவில்லை. 27 ரன்கள் எடுத்த நிலையில் பின்சை ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்க செய்தார். முதலாவது விக்கெட்டிற்க்கு கவாஜா - பின்ச் ஜோடி 76 ரன்கள் எடுத்தது. 

ஆனாலும், கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக விளையாடிவந்த காவாஜா இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கவாஜாவுடன் ஹேண்ட்கோப் இணைந்தார். இருவரும் பந்துகளை வீணடிக்காமல் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக விளையாடிய கவாஜா, ஒருநாள் போட்டியில் தனது 2ஆவது சதத்தை அடித்தார். அதன்பின்னர் காவஜா 100 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து ஹேண்டஸ்கோம்ப் மறுபடியும் தன்னுடைய அசத்தலான ஆட்டத்தால் அரைசதம் கடந்தார். அதன்பிறகு சமியிடம் ஹண்டஸ்கொம்ப் 60 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். அதோடு, அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வேல் 1 ரன் மட்டும் எடுத்திருந்த போது ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்த டர்னர் களமிறங்கினர். வந்த வேகத்தில் முதல் பந்திலே பவுண்டரி அடித்து மிரட்டினர். அடுத்தடுத்து சீரான வேகத்தில் ரன்களை சேர்ந்த அவர் குல்தீப் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அலேகஷ் கேரி வந்தவேகத்தில் 3 ரன்களுடன் சமியின் வேகத்தில் பேவிலியன் திரும்பினார்.

இறுதியில், அதிரடி காட்டிய ரிச்சர்ட்சன் மற்றும் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். கம்மின்ஸ் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிச்சர்ட்சன் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் சாய்த்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com