ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பிரெட் லீ-யின் தங்கல் யுத்தம்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்திய வீரர்களுடன் மல்யுத்தம் செய்துள்ளார்.
கர்நாடாகவில் நடைபெற்று வரும் கே.பி.எல் போட்டிகளின் வர்ணனையாளராக பிரெட் லீ பேசி வருகிறார். இந்நிலையில் மைசூருவில் உள்ள மல்யுத்த மைதானத்திற்கு வருகை தந்த பிரெட் லீ, அங்கிருந்த பயிற்சியாளர் ஒருவருடன் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோக் காட்சி கே.பி.எல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் மல்யுத்த மைதானத்தை தொட்டு வணங்கிய படி களத்திற்கு வரும் பிரெட் லீ, ஒருவருடன் மல்யுத்தம் செய்து வெற்றி பெரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பான புகைப்படத்தை பிரெட் லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, முதல்முறையாக இந்தியாவின் பராம்பரிய விளையாட்டான தங்கல் விளையாட்டை ஆடினேன் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்கிடையே மைசூர் மகாராணி ப்ரமோதா தேவியை சந்தித்த பிரெட் லீ, அவருக்காக பியானோவையும் இசைத்துக் காட்டியுள்ளார். சமீப காலமாக இந்தியாவின் கலாச்சாரத்தில் ஆர்வம் காட்டி வரும் பிரெட் லீ, அண்மையில் ‘An Indian’ எனும் படத்தில் தனிஷ்தாவிற்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.