"கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள்" மைக்கல் கிளார்க் !

"கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள்" மைக்கல் கிளார்க் !
"கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள்" மைக்கல் கிளார்க் !


ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கேப்டன் விராட் கோலியை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை வம்பிழுப்பதில்லை என்று ஆஸி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த 13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதுவும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திட்டமிட்டப்படி உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கடுமையாக சாடியுள்ளார். ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் "வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரிலும் இந்திய அணி மிகவும் வலுவானது. அதற்கு ஐபிஎல் போட்டித் தொடரே சான்று. ஆஸ்திரேலியாவும் இதர நாடுகளும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அணிக்குப் பிடித்தது போல நடந்துக் கொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக களத்தில் வாக்குவாதம் செய்ய பயந்தார்கள். அதற்கு கோலியை பகைத்துக்கொண்டால் பெங்களூர் அணியில் இடம் கிடைக்காது என்ற காரணமே".

மேலும் தொடர்ந்த கிளார்க் " கோலியை பகைத்துக்கொண்டால் அவருடன் சேர்ந்து விளையாட முடியாது அல்லவா. சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்குத் தேர்வு செய்கிறார்கள். எனவே வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. அப்போதுதான் அவர் என்னை பெங்களூர் அணிக்கு ஆறு வாரக் காலத்துக்கு 1 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்வார் என நினைக்கிறார்கள்" என்று சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com