\
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸுக்கு மெல்பேர்ன் மைதானத்தில் அஞ்சலி

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸுக்கு மெல்பேர்ன் மைதானத்தில் அஞ்சலி

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸுக்கு மெல்பேர்ன் மைதானத்தில் அஞ்சலி
Published on

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸுக்கு மெல்பேர்ன் மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான டீன் ஜோன்ஸ் கடந்த செப்டம்பரில் மும்பையில் காலமானார். கிரிக்கெட் பயிற்சியாளர், வர்ணனணயாளர் என பன்முக திறமை கொண்டவர் அவர். அவருக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மெல்பேர்ன் மைதானத்தில் மிகவுமே பிரியமாக விளையாடும் டீன் ஜோன்ஸுக்கு அந்த மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது பேட், ஆஸி அணியின் கேப் மற்றும் கண்ணாடியை மெல்பேர்ன் மைதானத்தின் ஆடுகளத்தில் வைத்து அவரது மனைவியும், மகள்களும் இதை செய்தனர். அப்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் உடன் இருந்தார். 

ஆஸ்திரேலிய  அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 9699 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் ஜோன்ஸ் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : CRICKET AUSTRALIA

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com