\
முதல் டி20: ராகுல் - ஜடேஜா அசத்தல் பேட்டிங்; ஆஸிக்கு 162 ரன்கள் இலக்கு

முதல் டி20: ராகுல் - ஜடேஜா அசத்தல் பேட்டிங்; ஆஸிக்கு 162 ரன்கள் இலக்கு

முதல் டி20: ராகுல் - ஜடேஜா அசத்தல் பேட்டிங்; ஆஸிக்கு 162 ரன்கள் இலக்கு
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. கான்பெரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்காக கே.எல். ராகுலும், தவானும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். மூன்றாவது ஓவரிலேயே ஸ்டார்க் வீசிய பந்தில் க்ளீன் போல்டானார் தவான். தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 9 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு சாம்சனும், ராகுலும் 38 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருப்பினும் அடுத்த 17 பந்தில் வெறும் 6 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. சாம்சன், ராகுல் மற்றும் மணீஷ் பாண்டே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதில் ராகுல் 51 ரன்களை குவித்திருந்தார். 

பத்து ஓவர் முடிவில் 75 ரன்களை 2 விக்கெட் இழப்பிற்கு குவித்திருந்த இந்தியா அடுத்த பத்து ஓவர்களில் 86 ரன்களை குவிக்க ஜடேஜாவின் ஆட்டம் உதவியது.

ஹர்திக் பாண்ட்யாவும் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஜடேஜா இறுதி வரை விளையாடி 23 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவிற்காக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 162 ரன்களை விரட்டி வருகிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com