ஷர்துல், இஷான் இல்லை; அணிக்கு திரும்பிய ரோகித், அக்சர் - டாஸ் வென்ற ஆஸி. பவுலிங் தேர்வு!

ஷர்துல், இஷான் இல்லை; அணிக்கு திரும்பிய ரோகித், அக்சர் - டாஸ் வென்ற ஆஸி. பவுலிங் தேர்வு!
ஷர்துல், இஷான் இல்லை; அணிக்கு திரும்பிய ரோகித், அக்சர் - டாஸ் வென்ற ஆஸி. பவுலிங் தேர்வு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால் முதல் போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் நீக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஷர்துல் நீக்கப்பட்டு, அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக நாதன் எல்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோஷ் இங்கிளிஸிற்கு பதிலாக அலெக்ஸ் கேரி சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும். இதனால் இன்றைய ஆட்டத்திற்கு பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. முன்னதாக மழை பெய்ததால் போட்டி நடைபெறுமா, இல்லையா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில், தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com