31 வருடத்துக்குப் பின் பாலோ- ஆன் பெற்ற ஆஸி. அணி!

31 வருடத்துக்குப் பின் பாலோ- ஆன் பெற்ற ஆஸி. அணி!
31 வருடத்துக்குப் பின் பாலோ- ஆன் பெற்ற ஆஸி. அணி!

சிட்னி டெஸ்ட் போட்டியில், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி, பாலோ ஆன் பெற்றிருப்பதை ஆஸ்திரேலியா மீடியா விமர்சித்து வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் ’சுவர்’ புஜாரா 193 ரன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 159 ரன், மயங்க் அகர்வால் 77 ரன், ஜடேஜா 81 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில், லியான் 4, ஹசல்வுட் 2, ஸ்டார்க் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 300 ரன்னுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் அதிகப்பட்சமாக 79 ரன் எடுத்தார். 

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். வெற்றிக்கு இன்னும் 322 ரன் என்ற தேவை என்ற நிலையில் பாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

1988-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று தோல்வி அடைந்தது. அதற்கு பின் 31 ஆண்டுகளாக, உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் அந்த அணி, பாலோ ஆன் பெற்றதில்லை. இப்போதுதான் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெருமையான விஷயம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com