முடிந்தது கொரோனா தனிமைப்படுத்துதல் - 108 நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இங்கிலாந்து தொடரை முடித்த கையோடு இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க அமீரகம் பறந்து சென்றார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவாலிபையர் இரண்டு வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியிடம் ஹைதராபாத் தோல்வியை தழுவியதை அடுத்து நவம்பர் 9 வாக்கில் ஆஸ்திரேலியா பறந்தார் வார்னர்.

Aussie opener @DavidWarner31 is reunited with his family after finishing his hotel quarantine ?@alintaenergy | #AUSvIND pic.twitter.com/JBiezwZ33n
— cricket.com.au (@cricketcomau) November 26, 2020

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட வார்னர் சுமார் 108 நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்துள்ளார். மனைவி மற்றும் மகள்களுடன் தற்போது பொழுதை செலவிட்டு வரும் வார்னர் நாளை நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.