\
ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்!

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்!

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
Published on

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், ஆஸ்திரேலிய அணி 216 ரன்களுக்குள் சுருண்டது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி அங்குள்ள மவுன்ட் மவுங்குனியில் இன்று நடந்து வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜேசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மெர்லோ 76 ரன்கள் எடுத்தார். அந்த அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய பந்துவீச்சாளர் பொரேல், நாகர்கோட்டி, ராய், சிவா சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் பிருத்வி ஷாவும் மன் ஜோத் கல்ராவும் ஆடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com