“தோனி போன்ற ஒரு பெஸ்ட் ஃபினிஷரை தேடுகிறோம்”: ஆஸ். பயிற்சியாளர்

“தோனி போன்ற ஒரு பெஸ்ட் ஃபினிஷரை தேடுகிறோம்”: ஆஸ். பயிற்சியாளர்

“தோனி போன்ற ஒரு பெஸ்ட் ஃபினிஷரை தேடுகிறோம்”: ஆஸ். பயிற்சியாளர்
Published on

தோனியைப் போன்ற ஒரு சிறந்த ஃபினிஷரை ஆஸ்திரேலிய அணிக்கு தேடி வருவதாக அந்த அணியின் பயிற்சியாளர் லஸ்டின் லங்கர் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதற்கு முக்கியமான காரணமாக ஆட்டத்தை இறுதிவரை இருந்து வெற்றிகரமாக முடிக்கும் வீரர்கள் இல்லை என கூறப்படுகிறது. மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பியதாலேயே இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் லஸ்டின் லங்கர், “எங்கள் அணியில் முன்பு மைக் ஹஸ்ஸி, மைக்கல் பெவன் போன்ற மாஸ்டர் கிளாஸ் வீரர்கள் மிடில் ஆர்டரில் இருந்தார்கள். மிடில் ஆர்டரில் தோனி ஒரு மாஸ்டர். அதேபோல், இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்” என்றார்.

கடந்த சில வருடங்களாக 4 முதல் 7 வரை உள்ள இடங்களுக்கு 13 பேட்ஸ்மேன்களை பயன்படுத்தி பார்த்துள்ளது ஆஸ்திரேலியா. அதேபோல், ஆறாவது இடத்திற்கு மட்டும் இதுவரை 9 பேட்ஸ்மேன்களை முயற்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com