ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 492 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் தன்னுடைய பதவியை ரஜினாமா செய்கிறார் அஸி. பயிற்சியாளர் டேரன் லீமான்
பந்தை சேதப்படுத்திய விவகாரம் அஸி.கிரிக்கெட் அணியில் மிக பெரிய புயலைக் கிளப்பி இருந்த நிலையில், அஸி. அணியில் அடுத்தடுத்த திருப்பங்கள் பல தினமும் நடந்து வருகிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவி பறிக்கபட்டு ஒரு ஆண்டு தண்டனையும், பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பயிற்சியாளர் டேரன் லீமானுக்கு தெரியாது என்றும் அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டது. சம்பவம் நடந்து ஓரிரு நாட்கள் கழித்து செய்தியாளர்களை சந்தித்த லீமான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி முடிந்ததும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டின் இறுதி நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி 492 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தான் ஏற்கனவே அறிவித்தபடி 48 வயதான டேரன் லீமான் தன்னுடைய அஸி.கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து விலகுகிறார்.