இது அவுட் இல்லையா? - இந்திய வீரர்களை கடுப்பேற்றிய மூன்றாம் நடுவரின் முடிவு!

இது அவுட் இல்லையா? - இந்திய வீரர்களை கடுப்பேற்றிய மூன்றாம் நடுவரின் முடிவு!

இது அவுட் இல்லையா? - இந்திய வீரர்களை கடுப்பேற்றிய மூன்றாம் நடுவரின் முடிவு!
Published on

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியுள்ளது. இத்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது அஷ்வின் வீசிய 55வது ஓவரில் கேமரூன் கிரீன் மற்றும் கேப்டன் டிம் பெய்ன் இடையில் ஏற்பட்ட குழப்பத்தினால் ரன் அவுட் வாய்ப்பை பெற்றது இந்தியா. கிரீன் மிட் ஆப் திசையில் பந்தை தட்டிவிட்டு ரன் ஓட தயங்கியபடி முன்னேறினார். நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த பெய்ன் வேகமாக கீப்பரை நோக்கி ஓடினார். மிட் ஆப் சர்கிளில் இருந்த ஃபீல்டரும் பந்தை பிடித்தவுடன் கீப்பர் பண்ட் கைகளுக்கு பாஸ் செய்தார். அவரும் பந்தை பிடித்தவுடன் ஸ்டெம்பை தகர்த்தார். லெக் அம்பயருக்கு சந்தேகம் இருந்ததால் டிவி அம்பயரான பால் வில்ஸனிடம் முடிவை விட்டு விட்டார். 

நீண்ட இழுபறிக்கு பின்னர் சந்தேகம் இருந்ததால் நாட் அவுட் என சொல்லி இருந்தார் பால் வில்ஸன். இதை அறிந்ததும் கேப்டன் ரஹானே அதிருப்தி அடைந்தார். அம்பயரின் முடிவை அறிந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும்  அதிருப்தி அடைந்தனர். “பெய்னின் பெட் கிரீஸ் லைனை தாண்டவே இல்லை” என்பது அவர்களது வாதம்.

களத்தில் உள்ள நடுவர்களை தாண்டி மூன்றாம் நடுவரின் முடிவுகளுமே விமர்சனத்திற்கு உள்ளாவது அவ்வவ்போது நிகழ்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com