ஜெர்ஸி கொடுத்த விராட், தோனி - ஆஸி. கேப்டனின் நெகிழ்ச்சி

ஜெர்ஸி கொடுத்த விராட், தோனி - ஆஸி. கேப்டனின் நெகிழ்ச்சி

ஜெர்ஸி கொடுத்த விராட், தோனி - ஆஸி. கேப்டனின் நெகிழ்ச்சி
Published on

தனக்கு ஜெர்ஸியை கொடுத்த தோனி மற்றும் இந்தியன் கேட்பன் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய அந்த அணி இரண்டு போட்டிகளிலும் விளையாடி கோப்பையை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. ஆனால் அடுத்த 3 போட்டிகளையுமே தொடர்ச்சியாக கைப்பற்றி, ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடர் கோப்பையும் வென்றது. இது இந்திய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.

இந்த கிரிக்கெட் தொடர் முடிந்து 45 நாட்கள் ஆகும் நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன், “இந்தியாவிற்கு எதிரான கடைசி தொடரில் விளையாடிய போது தோனி மற்றும் கோலி எனக்கு தங்கள் ஜெர்ஸியை கொடுத்தது மிக அதிர்ஷ்டமானது. அதே நேரத்தில் களத்தில் நாங்கள் எங்கள் நாடுகளுக்காக கடுமையாக மோதிக்கொண்டோம். நான் விளையாடிய அனைத்து போட்டிகளில் இந்திய தொடரில் விளையாடிய 2 போட்டிகளை பெருமையாக மதிக்கிறேன். இந்த வாய்ப்பை எங்களுக்கு தந்ததால் பெருமை கொள்வதற்கும், பாராட்டுவதற்கும் இது முக்கிய நேரமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com