விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்கிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் சிட்னி நகரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சிட்னியில் 2 ஆவது போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்தப் போட்டியில் ஆஸி அணியில் ஸ்டொய்னிஸ்க்கு பதிலாக மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.