ஆஸ்திரேலிய இந்திய ஒப்பந்த தூதுவராக மேத்யூ ஹைடன் நியமனம்

ஆஸ்திரேலிய இந்திய ஒப்பந்த தூதுவராக மேத்யூ ஹைடன் நியமனம்
ஆஸ்திரேலிய இந்திய ஒப்பந்த தூதுவராக மேத்யூ ஹைடன் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடனை இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் தூதர்களில் ஒருவராக ஆஸ்திரேலியா நியமித்துள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களின் தூதுவராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மற்றும் இந்தியாவம்சாவளியைச் சேர்ந்த லிசா சிங் ஆகியோரை ஆஸ்திரேலியா அரசு நியமித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா கவுன்சிலின் தலைவராக அசோக் ஜேக்கப் என்பவரும், துணைத்தலைவராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த லிசா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மேத்யூ ஹைடன்  மற்றும் டெட் பெயிலியு ஆகியோர் இணைந்து வேலை செய்வார்கள் எனத் தெரிகிறது.

இது குறித்து மேத்யூ ஹைடன் கூறும் போது, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவுடன் இணைந்து முன்னேற்றுவதில் இந்தக் கவுன்சில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். 48 வயதான ஹைடன், ஆஸ்திரேலிய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளையும், 161 ஒரு நாள் போட்டிகளையும் விளையாடியுள்ளார். 40 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜேக்கப் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கவுன்சிலுக்கு தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com