விளையாட்டு
ஆஸி. U -19 கிரிக்கெட் அணியில் ஸ்டீவ் வாஹ் மகன்!
ஆஸி. U -19 கிரிக்கெட் அணியில் ஸ்டீவ் வாஹ் மகன்!
ஆஸ்திரேலியாவின், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன் சேர்க்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஜனவரி 13-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, சேசன் சங்கா தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் மகன், ஆஸ்டின் வாஹ் சேர்க்கப்பட்டுள்ளார். அவரோடு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி, ஜேம்ஸ் சுதர்லாண்டின் மகன் வில் சுதர்லாண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆஸ்டின் சதமடித்திருந்தார். இதையடுத்து அவர் உலகக்கோப்பை போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.