450+ரன் குவித்த ஆஸி! 5 விக். இழந்த நியூசி! இந்தியாவா? இலங்கையா? பைனலில் இருக்க போவது யார்?

450+ரன் குவித்த ஆஸி! 5 விக். இழந்த நியூசி! இந்தியாவா? இலங்கையா? பைனலில் இருக்க போவது யார்?
450+ரன் குவித்த ஆஸி! 5 விக். இழந்த நியூசி! இந்தியாவா? இலங்கையா? பைனலில் இருக்க போவது யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைவதற்கான போட்டியானது, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டியானது வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்ததை அடுத்து, புள்ளிபட்டியலில் அதிக புள்ளிகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தது. இறுதிப்போட்டிக்குள் ஆஸ்திரேலியா கெத்தாக அடியெடுத்து வைத்துள்ளநிலையில், 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டிக்குள் நுழையும் போட்டியானது நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தான் வெட்டிய குழியில் தானாகவே சென்று சிக்கிய இந்திய அணி!

ஒருவேளை இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்காமல் இருந்திருந்தால், இலங்கை அணிக்கு இவ்வளவு பிரகாசமான வாய்ப்பாக தற்போது இந்திருக்காது.

3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றிபெற்றிருந்த நிலையில், பவுலிங்கை தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்ததே தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் போட்டியில் ரிவியூ எடுக்காமல் போனது, நோ பால் வீசப்பட்டது என எல்லாமே, இந்திய அணிக்கு பாதகமாக நடைபெற்ற நிலையில், அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ஸ்பின்னர்களை பேக்புட்டில் தள்ளியது.

3ஆவது போட்டியில் வெற்றிபெற்ற உணர்வோடு, 4ஆவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை எதிர்நோக்காமல், ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட்டது தான், இந்தியாவின் தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நியூசிலாந்தை எதிர்கொள்ள கடல் மட்டத்தில் இருந்து 4200 அடிக்கு மேல் உள்ள நிலப்பரப்பில் பயிற்சி மேற்கொண்ட இலங்கை!

ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொதப்பும் பட்சத்தில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திகொள்ள நினைத்த இலங்கை அணி, நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவதற்காக ஒரு புதிய வியூகத்தை கையில் எடுத்தது. நியூசிலாந்தில் இருக்கும் அதே தட்பவெப்பநிலையில் விளையாட வேண்டும் என்பதற்காக, கிட்டத்தட்ட நியூசிலாந்தை போன்றே நிலப்பரப்பு கொண்ட, கடல் மட்டத்தில் இருந்து 4200 அடி உயரத்தில் இருக்கும் நிலப்பரப்பில் சென்று பயிற்சியில் ஈடுபட்டது. 5 விதமான கடினமான பிட்ச்களில் பயிற்சி பெற்றதற்கு பிறகு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி, முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கையும், பவுலிங்கையும் வெளிப்படுத்தி விளையாடிவருகிறது.

WTC பைனலுக்கு செல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இந்திய அணியானது இலங்கை அணிக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று நினைத்தால், நிச்சயம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். ஒருவேளை போட்டியில் தோல்வியை தழுவினாலோ இல்லை டிரா செய்தாலோ, இலங்கை அணிக்காக இறுதிப்போட்டி வாய்ப்பானது பிரகாசமாக மாறும்.

இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி கனவை கலைக்கும் பொருட்டு, ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்துள்ளது. தற்போது இந்திய அணிக்கு இருக்கும் நெருக்கடியானது, இன்னும் சற்றே அதிகமாகவே மாறியுள்ளது.

WTC பைனலுக்கு செல்ல இலங்கை என்ன செய்ய வேண்டும்?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 355 ரன்கள் குவித்து சிறப்பான ரன்களை பதிவுசெய்தது மட்டுமில்லால் 163 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது இலங்கை அணி. களத்தில் 40 ரன்களுடன் இருக்கும் ப்ரேஷ்வெல் விக்கெட்டை வீழ்த்திவிட்டாலே நியூசிலாந்தை 250 ரன்களுக்கு சுருட்டிவிட முடியும். இலங்கை அணி மேற்கொண்டுவந்த பயிற்சியானது, அவர்களுக்கு நல்ல பலனையே கொடுத்துள்ளது. அவர்களுடைய நிபந்தனையானது 2 போட்டிகளில் வென்று தொடரை 2-0 என கைப்பற்ற வேண்டியது மட்டுமே.

ஆஸி 400+ ரன்கள் அடித்த நிலையில், இந்தியா வெற்றி பெற்றுள்ளதா?

4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்த நிலையில், பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த போட்டியானது முடிந்தளவு டிராவை நோக்கி தான் செல்லும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து 9 முறை ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 400+ ரன்களை அடித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒரேஒருமுறை மட்டுமே ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் 4 முறை தோல்விகளையும், 3 முறை போட்டியானது டிராவை நோக்கி மட்டுமே சென்றுள்ளது. அந்தளவு இந்திய அணி டாமினேட் செய்துள்ளது.

எடுத்துக்காட்டாக 2001ஆம் ஆண்டில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்களை குவிக்க, அதை எதிர்கொண்ட இந்திய அணி 171 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது. இந்தியா ஆல் அவுட்டான நிலையில் ஆஸ்திரேலியா இந்தியாவை தொடர்ந்து பாலோ-ஆனில் பேட்டிங் செய்யுமாறு நிர்பந்தித்து. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 383 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, இந்தியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

4ஆவது டெஸ்ட் போட்டியை வெற்றிபெற்றே ஆகவேண்டிய நிலையில் இருக்கும் இந்திய அணி, 3ஆவது நாளில் நிச்சயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவிக்க வேண்டும். இந்தியாவின் டாப் ஆர்டர்கள் சதங்களை எடுத்து வந்து 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விரைவாக வீழ்த்தினால், இந்த போட்டியை இந்திய வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை போட்டி டிராவை நோக்கி சென்றாலோ இல்லை போட்டியில் இந்தியா தோல்வியுற்றாலோ, இந்தியா இலங்கை அணியின் வெற்றி தோல்வியை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com