இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சாளர் அபாட் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சாளர் அபாட் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சாளர் அபாட் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அபாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 17-ஆம் தேதி நடைபெறுகிறது. அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது நடைபெறுகிறது. முன்னதாக இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியின்போது காயமடைந்தார் அபாட். இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஏற்கெனவே காயம் காரணமாக டேவிட் வார்னர் முதல் டெஸ்ட்டில் பங்கேற்கவில்லை. இப்போது அபாட்க்கு பதிலாக ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியுடன் விடுவிக்கப்பட்டார். தற்போது நிலைமை சரியாகி விட்டதால் அவர் ஆஸ்திரேலிய அணியுடன் மீண்டும் இணைகிறார். இந்தத் தகவலை பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய ஹேசல்வுட் "ஸ்டார்க்கின் வருகை உற்சாகம் அளிக்கிறது. எங்களது அணியிலும், பந்து வீச்சு கூட்டணியிலும் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கக்கூடியவர். பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பதை ஒவ்வொருவரும் அறிவர். இந்த வகை பந்தில் அவர் தனித்துவமான பந்து வீச்சாளர். எனவே அவர் இணைந்தது எங்களுக்கு பலம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com