''பிளாஸ்டிக் நாற்காலி தான் நமக்கு ஸ்டெம்ப்'' - ரோட்டு கிரிக்கெட் விளையாடிய பிரட் லீ
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் குஷி தான். விளையாடும் இந்திய வீரர் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் இந்தியா வந்து ஒரு டூர் அடித்துவிடுகிறார்கள். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹைடன் மாறுவேடத்தில் சென்னை தி நகரை சுற்றி வந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ஜெய்ப்பூர் சாலையில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சாலையில் நடுவே ஸ்டெம்புகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நாற்காலியை வைத்துகொண்டு சிறுவர்களுடன் பிரட் லீ கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பந்துவீசுவது எப்படி, பேட்டிங் செய்வது எப்படி என்றும் சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விளையாட்டை முடித்துவிட்டு ஒட்டகச்சவாரியும் செய்து பிரட் லீ மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.