\
கோலி ஆடலைன்னாலும் தேடி வருது, ஆடி!

கோலி ஆடலைன்னாலும் தேடி வருது, ஆடி!

கோலி ஆடலைன்னாலும் தேடி வருது, ஆடி!
Published on: 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சரியாக ஆடவில்லை என்றாலும் பெங்களூர் அணி அணி கேப்டன் விராத் கோலியின் அதிர்ஷ்டத்துக்கு மட்டும் குறைவில்லை. பின்னே, ஆடி கார் பிரியரான கோலிக்கு ஆடி நிறுவனமே தேடி வந்து பரிசளித்திருக்கிறது புதிய மாடல் காரை!

ஜெர்மன் நிறுவனமான ஆடி, இந்தியாவுக்கு வந்து பத்து வருடம் ஆனதை கொண்டாடும் விதமாக, இந்த கிப்டை இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலிக்கு வழங்கியிருக்கிறது. இந்த ஆடி கியூ7 காரின் விலை, ஜஸ்ட் ரூ.87 லட்சம்தான்!

ஆடி கார்களின் தீவிர பிரியரான கோலியின் வீட்டில் ஏற்கனவே, ஆடி R8 LMX லிமிட்டெட் எடிசன், ஆடி R8 V10, ஆடி A8L W12 Quattro, ஆடி S6, ஆடி Q7 4.2 TDi ஆகிய ’ஆடி’கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இப்போது இந்த 87 லட்சம் ரூபாய், காரும் புதிதாக சேர்ந்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com