டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்தில் இருந்து 5 பேர் தடகளத்திற்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்தில் இருந்து 5 பேர் தடகளத்திற்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்தில் இருந்து 5 பேர் தடகளத்திற்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் போட்டிகளில் 26 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக இந்திய தடகள சம்மேளனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் தடகள பிரிவில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்-வீராங்கனைகளை இந்திய தடகள சம்மேளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 1,600 மீட்டர் தொடர் ஓட்டம் 4 பேர் கொண்ட ஆடவர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் 1,600 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திற்கான 4 பேர் கொண்ட அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுதா வெங்கடேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் வரும் 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தொடர் ஓட்ட வீரர்-வீராங்கனைகள் முத்திரை பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளம் உட்பட வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப் படகு போட்டி என தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களை தவிர தமிழ்நாட்டில் பிறந்து வெவ்வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த 3 வீரர்-வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com