“நான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்” - சாந்தியின் கண்ணீர் கதை

“நான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்” - சாந்தியின் கண்ணீர் கதை

“நான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்” - சாந்தியின் கண்ணீர் கதை
Published on

தன்னை தொடர்ந்து சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் நோகடிப்பதாக ராஜன் என்பவர் மீது ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன். பட்டியல் இனத்தை சேர்ந்த சாந்தி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது வெற்றியின் கொண்டாட்டம் அடங்குவதற்கு முன்னர் அவர் வென்ற பதக்கம் பறிக்கப்பட்டது. பாலின சோதனையில் நடத்தப்பட்ட சோதனையில் சாந்திக்கு அதிக அளவு டெஸ்டோஸ்டெரோன் இருப்பதாகக் கூறி பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த அளவு டெஸ்டோஸ்டெரோன் இருப்பவர்கள் பெண்களுடன் போட்டியிடக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது.

ஏழைக்குடும்பத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்த தமிழ் வீராங்கனையின் கனவு கிழித்து வீசப்பட்டன. கனவு கலைந்தது மட்டும் சாந்தியின் துயரம் அல்ல. அவர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அடியெடுத்து வைத்த நாள் முதலே அவரது துயரங்கள் தொடங்கின. பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால், அவருக்கு சாதிய ரீதியான எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக ராஜன் ஆப்ரஹாம் என்பவர் மீது சாந்தி அதிக குற்றச்சாட்டுகளை வைத்தார். தன்னை சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாதவும் இழிவுபடுத்தி மனதை புண்படுத்துவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக சாந்தி சென்னை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், “எனது சகவீரர் ராஜன் என்னை சாதிய, பாலின ரீதியாக பல வருடங்களாக இழிவு படுத்திவருகிறார். நான் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கும்போது, எனது சாதியின் பெயரைச்சொல்லி கொச்சைப்படுத்துவார். இந்த நாய்கள் எல்லாம் ஏன் விளையாட்டிற்கு வருகின்றன? எனக்கூறுவார். அத்துடன் என்னை ஆண் என்று கூறி காயப்படுத்துவார். அவன் எல்லாரையும் ஏமாத்துறான் எனக்கூறுவார். மேலும் நீ இன்னும் எத்தனை நாள் இங்கு இருக்கிறாய் என பார்க்கலாம் என மிரட்டுவார்” என்று தெரிவித்திருந்தார்.

இதுமட்டுமின்றி, “நான் கழிவறைக்குள் சென்றால், சத்தமாக அந்த ஆணை வெளியே அனுப்புங்கள் எனக் கத்துவார். மற்ற மாணவர்களிடம் என்மீது பாலியல் புகார் அளிக்குமாறு வற்புறுத்துவார். அவர் என்னை அங்கிருந்து அனுப்பதவற்கு பல திட்டங்களை தீட்டினார்” என கண்ணீர் மல்க புகாரில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஜாதிய ரீதியாக பட்டியல் இனப்பெண்ணை இழிவுபடுத்துதல், பணியை செய்யவிடாமல் தொந்தரவு செய்தது, சாதிய ரீதியான அட்டூழியங்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் நீண்ட காலமாகியும் இந்த வழக்குகள் தொடர்பாக ராஜன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் கண் கலங்கும் சாந்தி, “நான் கையெடுத்து அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். என்னை எங்காவது பயிற்சியாளராக நியமித்து விடுங்கள். இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை தயார்படுத்த என்னை அனுமதியுங்கள்” என கேட்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com